சாலையறும் வீடமிழும் செய்யழுகும் கார்பெருகின்
சோலையெலாம் வேர்நழுவிப் போம்
ஆக்கும் திறனில்லை ஆயினும் வந்ததைத்
தேக்கும் திறனுண்டேல் நன்று
தேக்கும் திறனுண்டேல் நன்று
மறுமை தொழுதுபொல்லா இம்மை பொறுத்தல்
வறுமை உழலும் வழி
வறுமை உழலும் வழி
உலகு பெருங்கூண்டு நாம்கிளிக் கூட்டம்
வளர்ப்பது யார்விளை யாட்டு
வளர்ப்பது யார்விளை யாட்டு
இருப்பார்நூல் வாங்கிடுவர் இல்லாரென் செய்வர்
விருப்புநூல் கற்பதற் கு
விருப்புநூல் கற்பதற் கு
ஆவிபறி போகுமையோ ஆலையைத்தான் மூடென்றோம்
ஆவி பறித்த தரசு
ஆவி பறித்த தரசு
அழிமழை ஓசைகேட்டு அஞ்சுதே நெஞ்சம்
பொழிமழையே போதும் நிறுத்து
பொழிமழையே போதும் நிறுத்து
இவரை இதனால் மணமுடிப்போம் என்றாய்ந்(து)
அவரையே காதல் செயல்
அவரையே காதல் செயல்
நாடாள்வோர் செய்பிழையால் நோய்க்கஞ்சி வாழ்விழந்து
காடாக மாறுதிந்த நாடு
காடாக மாறுதிந்த நாடு
நொடியில் உருட்டி விழுங்கு(து) இயற்கை
துடித்துச் சுருங்குது வாழ்வு
துடித்துச் சுருங்குது வாழ்வு
No comments:
Post a Comment