kathirkural

 நால்வர்க்கு ஊண்தருவோம் நாமுண்போம் நீத்தார்தம் வாழ்வெண்ணி வாழ்வோம் சிறந்து கோவணம் கட்டான்தான் வேட்டி தலைப்பாகை ஆவணுமா என்பான் எரிந்து பழமென்...

Sunday, 8 August 2021

kathirkural

 நால்வர்க்கு ஊண்தருவோம் நாமுண்போம் நீத்தார்தம்
வாழ்வெண்ணி வாழ்வோம் சிறந்து

கோவணம் கட்டான்தான் வேட்டி தலைப்பாகை
ஆவணுமா என்பான் எரிந்து

பழமென்று போற்றிப் புகழ்வார் முரண்டால்
கிழமென்று தள்ளி விடும்

மொழியகழ்ந்து சொன்னார் தமிழ்த்தொன்மை மூத்தோர்
குழியகழத் தோன்றுதின்று சான்று

நானில்லை நீயில்லை நாமென்று கூடினார்க்கு
தேன்சேர் கனியாகும் வாழ்வு

தாண்டா(து) உயர்ந்தனன் நண்பன் வலியுணர்ந்து
பொன்னாய்ப் பொலிந்தது நட்பு

பெண்புகாத கோயிலும் பெண்செயாத பூசையும்
பெண்தொழாத தெய்வமும் பாழ்

பெண்ணைத் தெருட்டிப் புணர்வோன்தான் யாரெனினும்
மண்ணில் உயிர்வாழல் தீது

சாதி மறப்பர் பெரியார் சிறியார்தம்
சாதிக்குள் காதலிப்பர் பார்

பணமுதலை காக்கும் திறன்கற்றார் அன்று
வனமுதலை விட்ட பொழுது

No comments:

Post a Comment